Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சேட்டை புடிச்ச பையன் சார், இந்த விஜய்; பீஸ்ட் மற்றும் தளபதி 66 அப்டேட்!

    சேட்டை புடிச்ச பையன் சார், இந்த விஜய்; பீஸ்ட் மற்றும் தளபதி 66 அப்டேட்!

    தமிழகத்தில் தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் குறித்து எவரும் எவருக்கும் விரிவாக கூற வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு அனைவருக்கும் விஜய் அவர்களின் மாஸ் குறித்து தெரியும். விஜய் நடிப்பில் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம்தான், பீஸ்ட்!  

    விமர்சன ரீதியாக பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பீஸ்ட் திரைப்படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளிலேயே 40 கோடி வசூல், 5 நாட்களில் 200 கோடி வசூல் என பீஸ்ட் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. 

    விஜய் அவர்கள் பத்து வருடங்களுக்குப் பிறகு, தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் அளித்தது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தை பிடிக்காதவர்களுக்கு கூட விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற நேர்காணல் பலருக்கும் பிடித்ததாய் இருந்தது. நெல்சன் திலீப்குமார் அவர்களின் கேள்விகளும், அதற்கு விஜய் அளித்த பதில்களும், பாவனைகளும் பலரைக் கவர்ந்தது. விஜய் கூறிய சில பதில்கள் விஜய்யை சேட்டை பிடித்த ஆளாக இருக்காரே என்று கூற வைத்தன.

    இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் உருவானது எப்படி என ஒரு நிகழ்ச்சியானது, சன் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பபடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த நிகழ்ச்சிக்கான புரோமோ ஓன்றும் வெளியிடப்பட்டது.

    பீஸ்ட் திரைப்பட படப்படிப்பின்போது நிகழ்ந்தவைகள் காட்சியாக்கப்பட்டவைகள் இப்புரோமோவில் இடம்பெற்றன. அதில் ஒரு காட்சியில் விஜய் அவர்கள் பிளாஸ்டிக் தோட்டாக்களை வெளியிடும் பொம்மை துப்பாக்கி ஒன்றை கையில் வைத்துள்ளார். பின்னர், அத்துப்பாக்கியால் விடிவி கணேஷின் தொப்பையை நோக்கி குறிவைத்து தோட்டாவை வெளியிடுகிறார். அந்த பிளாஸ்டிக் தோட்டாவும் விடிவி கணேஷின் தொப்பை மீது பட அவர் உட்பட அனைவரும் சிரிக்கின்றனர். பார்க்கும் நமக்கும் சிரிப்பு வருகிறது. 

    மேலும், அதே புரோமவில் விஜய் சிறுவர் ஒருவருடன் நடனமாடும் காணொளியும் இடம்பெற்றுள்ளது. இதுவும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளது. வெளிவந்துள்ள ஒரு புரோமோவிலே விஜய் செய்யும் சேட்டைகள் இடம்பெற்றுள்ளாதால், நிகழ்ச்சியிலும் அதிக காட்சிகள் இடம்பெறும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். 

    vamsi

    இதற்கிடையில், தளபதி 66 பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் சிறிய காட்சிகள் சிலவற்றை மட்டும் தற்போதைக்கு படக்குழு முடித்திருக்கிறது. தளபதி 66 திரைப்படத்தின் இயக்குனர் வம்சி அவர்களும், இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் அவர்களும் இணைந்து தற்போது திரைப்படத்திற்கான பாடல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் இது குறித்து தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இதையும் படியுங்கள், ‘அதில் நான் சக்கரவர்த்தியடா’ – வசூலில் வேறு மாதிரியான ஆட்டம் ஆடும் தளபதி விஜய்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....