Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்செவ்வாயில் மனித மூளை வடிவ திட்டுகள் : ஐரோப்பிய விண்கலம் கண்டுபிடித்தது என்ன ?

    செவ்வாயில் மனித மூளை வடிவ திட்டுகள் : ஐரோப்பிய விண்கலம் கண்டுபிடித்தது என்ன ?

    ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி நிறுவனத்தின் மார்ஸ் விண்கலம் சூரிய மண்டலத்தில் அறியப்பட்ட புதிரான விவரங்கள் பற்றிய புதிய படங்களை படம் பிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதி உட்டோப்பியா என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியின் வடக்கு அரைக்கோளம் அதன் பகுதிகளில் உள்ள பள்ளங்களால் வகைப்படுத்தப் படுகிறது. இந்த பகுதியில் பனிக்கட்டிகள் மேற்பரப்பிலும், அதற்கு கீழாகவும் மற்றும் அதன் ஆழத்திலும் காணப்படுகிறது. 

    3300 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்தப் பகுதி பூமியில் உள்ள சஹாரா பாலைவனத்தின்  வடக்கு-தெற்கு பகுதியை விட இரண்டு மடங்கு சிறியதாக உள்ளது. இப்பொழுது மார்ஸ் விண்கலம் அதன் மேற்பரப்பில் மனித மூளையில் காணப்படுவது போன்ற வடிவங்களை கண்டறிந்துள்ளது. 

    மார்ஸ் எக்ஸ்பிரஸ் கண்டுபிடித்திருக்கும் இந்த புகைப்படம், செவ்வாய் கிரகத்தின் முன்னொரு காலத்தில் காற்று மற்றும் நீரால் கொண்டு செல்லப்பட்ட வண்டல், எரிமலை குழம்புகள் மற்றும் ஆவியாகும் பொருட்கள் ஆகிவற்றால் நிரம்பியதால் இந்த உட்டோப்பியா பிளானிஷியாவில் இந்த துண்டு உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    இந்த புகைப்படம் மேண்டல்ட் டெபாசிட்ஸ் எனப்படும் மேற்பரப்பின் பெரிய, மென்மையான திட்டுகளைக் காட்டுகிறது. இந்த திட்டுகள் பனி அடுக்குகள் மற்றும் தூசி நிறைந்த பொருட்கள் சேர்ந்து அதன் மேற்பரப்பை மென்மையாக்கி, இப்பொழுது இருக்கும் செவ்வாய் கிரகத்தின் அச்சை விட அதிகமாக சாய்ந்த பொழுது பனியாக மாறி இருக்கலாம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. 

    இரண்டு பெரிய அடுக்குகளால் சூழப்பட்ட இரண்டு பெரிய பள்ளங்கள் தான் விண்கலத்தின் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளங்கள் பார்ப்பதற்கு மனித மூளையின் மேற்பரப்பில் காணப்படும் சிக்கலான வடிவங்கள் மற்றும் குவிவு வடிவங்கள் போல சிதைந்து மற்றும் சிதையாத நிலையில் உள்ளன. 

    இதனை ஆராய்ந்த ஆராச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தின் வடக்குச் சமவெளி மற்றும் தெற்கு மலைப்பகுதிக்கு இடைவெளியில் உள்ள பகுதி இருவகை அமைப்பை சேர்ந்தது என்று கூறியுள்ளனர். 

    இந்த மூளைப் பக்கத்திற்கு அருகில் செவ்வாயின் நீண்ட கருமைநிற பகுதி உள்ளது. அந்த பகுதியோ பனி குறைவாக உள்ள பகுதி மேலும் குறைந்த வெப்பநிலையால் அங்கு நிலம் சுருங்கி விரிந்து விரிசலுடன் காணப்படுகிறது. இதனாலேயே அங்கு கரிய நிறம் தோன்றுகிறது. 

    இந்த திட்டுகள் மற்றும் படிமங்கள் பனி உருகி மீண்டும் கட்டியாகும் விளைவால் ஏற்பட்டிருக்கும் ஆய்வாளர்கள் ஊகித்து உள்ளனர். இந்த பள்ளங்களை நன்கு உற்று நோக்கினால் அதனைச் சுற்றி ஒரு மேலடுக்கு பதிவு காணப்படுகிறது. 

    2033 ஆம் வரை செவ்வாய் கிரகத்தை சுற்றி வர இருக்கும் மார்ஸ் விண்கலம் இதுபோன்று செவ்வாயின் பகுதிகளை படம் பிடித்து ஆராய்ச்சி செய்ய இருக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....