Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின் - தகவல்கள் உள்ளே!

    உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின் – தகவல்கள் உள்ளே!

    கமல்ஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக இணையவிருக்கும் செய்தி அரசியல், சினிமா என இரு வட்டாரத்திலும் அதிகம் பேசப்படும் பொருளாய் மாறி வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம்தான் விக்ரம். தமிழ் திரையுலகின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக மட்டுமே விக்ரம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்னம் வெளிவந்த மாநாடு, கைதி, மாஸ்டர் என அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில்தான் உள்ளது. இவ்வரிசையில் விக்ரம் திரைப்படமும் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விக்ரம் திரைப்படம் தொடங்கும் முன்பே விக்ரம் திரைப்பட அறிவிப்புக்காக வெளியிடப்பட்ட காணொளியானது பலத்த வரவேற்பை பெற்றது. அந்த அறிவிப்பு காணொளியில் உலகநாயகன் கமல்ஹாசன் சொல்லும் ஆரம்பிக்கலாங்கலா வார்த்தை அன்றிலிருந்து இன்றுவரை ட்ரெண்டில் இருந்து வருகிறது. 

    அறிவிப்பை அடுத்து விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக அமெரிக்காச் சென்று திரும்பிய கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விக்ரம் திரைப்படத்தின் படப்படிப்பு பாதிக்கப்பட்டது. 

    தொற்றில் இருந்து முற்றிலுமாய் குணமாகியப்பின் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. அதன்பிறகு, நகராட்சி உட்புறத் தேர்தல் நடைபெற கமல்ஹாசன் பிஸியானார். இருப்பினும் அச்சமயத்தில் மற்ற நடிகர்களின் படப்படிப்பை நிகழ்த்தினார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 

    இந்நிலையில் கடந்த மாதம் விக்ரம் திரைப்படத்தின் முழுபடப்பிடிப்பும் முடிக்கப்பட்டு திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, விக்ரம் திரைப்படம்  ஜூன் மாதம் மூன்றாம் தேதி  வெளிவர உள்ளது. 

    நடிப்பின் உச்சமாக பார்க்கப்படும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்காலத்தில் மிக முக்கிய நடிகர்களாக பார்க்கப்படும் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோருடன் நடித்திருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சன் திரைப்படம் என்பதால் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. 

    விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது. இதை இரு தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. 

    அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் இருவரும் சினிமாவினால் இணைந்துள்ள இந்நிகழ்வு சினிமா வட்டாரங்களில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாய் மாறியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....