Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்ட வீடு; முற்றுகை போராட்டத்தில் மக்கள்

    குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்ட வீடு; முற்றுகை போராட்டத்தில் மக்கள்

    வீடுகள் ஒதுக்குவதில் குலுக்கல் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

    திருச்சி மாவட்டம், தாராநல்லூர் அருகே இருக்கும் கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதில் 64 மாடி வீடுகளும் 75 வீடுகளும் தற்போது பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

    இதைத்தொடர்ந்து குலுக்கல் முறையில் பயனானிகளுக்கு வீடு ஒடுக்குவதற்கான தேர்வு இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் இருக்கும் தமிழ்நாடு நகர்ப் வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் நடைபெற்றது. 

    இதில் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு முறையான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், கல்மந்தை பகுதியில் வசித்து வந்த சிலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, பூலோகநகர் கோயில், சந்து கடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40 பேருக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இப்போது குலுக்கல் நடத்தப்படவில்லை எனவும், திங்கள்கிழமை முறையாக குலுக்கல் நடத்தப்பட்டு மக்களுக்கு வீடு ஒதுக்கப்படும் எனவும், அவர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

    ரயிலை மறித்த கே.எஸ்.அழகிரி; பாய்ந்த வழக்கு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....