Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இன்று இரவு 08.30 மணிக்கு பூமி நேரம் கடைபிடிப்பு

    இன்று இரவு 08.30 மணிக்கு பூமி நேரம் கடைபிடிப்பு

    காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இன்று இரவு 08.30 மணிக்கு ‘பூமி நேரம்’ கடைபிடிக்கப்பட உள்ளது. 

    காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இந்த ‘பூமி நேரம்’ கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தனிநபர்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அணைத்து விளக்குகளையும் ஒரு மணி நேரம் அணைப்பர். 

    இந்த ‘பூமி நேரம்’ நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று மார்ச் 25 ஆம் தேதி ‘பூமி நேரம்’ கடைபிடிக்கப்படுகிறது. அதே சமயம், இந்த நிகழ்வில் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக வனவிலங்கு நிதியம் சிட்னி, விளக்குகளை அணைக்கும் நிகழ்வினை தொடங்கியது. அதன்படி, முதலில் 2007 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ‘பூமி நேரம்’ என்ற பெயரில் இரவு 07.30 மணிக்கு சிட்னியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

    இதைத்தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு இந்த நிகழ்வை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று மார்ச் 29 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் அப்போது உலக முழுவதிலும் பல மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றனர். அன்று முதல் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் இந்த பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், இந்த ஆண்டு இன்று உள்ளூர் நேரப்படி இரவு 08.30 மணி முதல் 09.30 மணி வரை பூமி நேரம் கடைபிடிக்கப்பட உள்ளது.  

    “திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள்” – பகாசூரன் குறித்து மோகன்.ஜி பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....