Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ரயிலை மறித்த கே.எஸ்.அழகிரி; பாய்ந்த வழக்கு..

    ரயிலை மறித்த கே.எஸ்.அழகிரி; பாய்ந்த வழக்கு..

    ராகுல் காந்தியின் சிறைத் தண்டனையை எதிர்த்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ஆம் ஆண்டு  மோடி பெயரை அவரின் சமூகம் சார்ந்து பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 23-ஆம் தேதி, சென்னை வருவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இந்த செய்தியை அறிந்து உடனடியாக ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார். 

    இந்நிலையில், ரயில் மறிப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 3 பேர் மீது, அனுமதியின்றி கூட்டம் திரட்டி, ரயிலை மறித்தது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் ரயில்வே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ட்விட்டருக்கு எதிராக களமிறங்கிய புதிய செயலி; முன்னாள் சிஇஓ செய்த செயல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....