Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்ற, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது. 

    இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் முழுத்திறமையை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் மீது அதீத குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் வைக்கப்பட்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் இரண்டு போட்டிகளில் ஸ்டார்க் பந்துவீச்சிலும், கடைசிப் போட்டியில் ஆஷ்டன் அகர் சுழலிலும் தனது விக்கெட்டை இழந்திருந்தார். அதுவும் மூன்று முறையுமே டக் அவுட் ஆனார். இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். 

    இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு யுவராஜ் தனது ஆதரவை அவருக்கு கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, “ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்களது கரியரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வர். நாம் அனைவருமே இதை ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டு இருப்போம். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் மிக முக்கிய வீரர் என நான் நம்புகிறேன். உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் முக்கிய பங்களிப்பை அவர் கொடுத்து அசத்துவார். நம் வீரர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். நம் சூர்யா நிச்சயம் எழுச்சி பெறுவார்” என தெரிவித்துள்ளார்.

    கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....