Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்82 ஆயிரம் கைதிகள் விடுதலை; ஈரானில் நடவடிக்கை!

    82 ஆயிரம் கைதிகள் விடுதலை; ஈரானில் நடவடிக்கை!

    ரமலான் நோன்பு தொடங்க இருப்பதை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 82 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் அரசு கைது செய்தும், அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினரை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான போராட்டக்காரர்களில் சிலர் பொதுமக்கள் முன்பாக தூக்கிடப்பட்டதும் நடந்தது.
    இதனிடையே ஈரானில் தொடங்கிய ஹிஜாப் போராட்டம் சர்வதேச அளவிலும் பரவியது. போராட்டம் தொடங்கி 6 மாதங்களை தொடங்கிய நிலையில், ஈரான் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

    அதன்படி, ஈரான் அரசு, ரமலான் நோன்பு தொடங்க இருப்பதை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 82 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

    துருவ நட்சத்திரம் குறித்து வெளிவந்த தகவல்..உற்சாகத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....