Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாசடைந்த நாடு: இந்தியா எத்தனையாவது இடத்தில்?

    மாசடைந்த நாடு: இந்தியா எத்தனையாவது இடத்தில்?

    உலகில் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 ஆம் இடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகளவில் இயற்கை மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை குறைக்க பல முன்னெடுப்புகளை உலக நாடுகள் எடுத்து வந்தாலும், அதற்கான பயன்கள் பெருமளவில் இல்லை.

    இச்சூழலில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAIR என்ற நிறுவனம் உலக நாடுகளின் காற்று தரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுமார் 131 நாடுகளில் உள்ள 7,300 நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டு உலகில் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 ஆம் இடம் பிடித்துள்ளது. உலக நாடுகளில் அதிகம் மாசைந்த நாடாக மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சாட் (Chad) உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம் ஆகிய நாடுகள் மாசைந்த நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

    முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு மாசடைந்த பட்டியலில் இந்தியா ஐந்தாமிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    82 ஆயிரம் கைதிகள் விடுதலை; ஈரானில் நடவடிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....