மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளித்துவிடுவீர்கள். கணவன்-மனைவி இடையே இருந்துவந்த பிரச்சனைகள் விலகி அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சற்று கவனமுடன் இருப்பது அவசியம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் பெருமை அடையும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் வழி நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் எப்போதும் போல் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் முயற்சிக்கான பாராட்டு கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அதற்கு சற்று கூடுதலாக உழைக்க நேரிடும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சில தேவையற்ற செலவுகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தந்தை வழி நீங்கள் எதிர்ப்பார்த்த பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை சீராகக் காணப்படும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டாகும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில் எப்போதும் இருக்கும் நிலையே நீடிக்கும். தொழிலில் விடாமுயற்சி அவசியம். இதுவரை இருந்த வந்த பிரச்சனைகள் விலகி தெளிவு பிறக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டாகும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தந்தையுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்ப்பார்த்த வேலை கிடைக்கும். அலுவலக பணி காரணமாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கும்.
போலி துப்பாக்கி மூலம் திருநங்கையிடம் தகராறு; கைதான யூடியூபர்ஸ்!