Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரித்து காணப்படும். பேச்சினால் சில பிரச்சனைகள் தோன்றும் என்பதால் பொறுமை அவசியம். அலுவலகத்தில் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அதே சமயம் பணியில் மிகுந்த கவனம் தேவை. தொழிலில் லாபம் கிடைக்கும். இருப்பினும் கவனமுடன் இருப்பது நல்லது. 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் அதுக்கேற்ற செலவுகளும் இருக்கும். கணவன்-மனைவி இடையே இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி நிலைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் உழைப்புக்கு ஏற்ற லாபம் இருக்கும். 

    மிதுனம்: 

    மிதுன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. வரவு திருப்திகரமாக இருந்தாலும் சில தேவையற்ற செலவுகள் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பிள்ளைகள் உங்களுக்கு பெருமை சேர்ப்பர். அலுவலகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இருக்கும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, சுமாரான நாட்களாக அமைந்துள்ளன. பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே சமயம் சில தேவையற்ற செலவுகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களைச் சந்தித்து பேசுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும். சகோதரர் வழி உறவுகளால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். அலுவலக பணியில் சற்று கவனமுடன் இருப்பது அவசியம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். கணவன்-மனைவி இடையே சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணிகளை உற்சாகமுடன் செய்து காட்டுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாட்களாக அமைந்துள்ளன. பொருளாதார நிலைமை உயர்ந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் காணப்படுகிறது. குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சற்று கூடுதல் வேலை இருக்கும். இருப்பினும் அதை உற்சாகத்துடன் செய்து காட்டுவீர்கள். தொழிலில் லாபம் ஓரளவு காணப்படும்.

    ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் கட்டணம்; பயனர்கள் அதிர்ச்சி! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....