Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்'100 திருமணம் செய்ய வேண்டும்..இதுதான் என் குறிக்கோள்' - ஆச்சரியப்படுத்தும் 60 வயது முதியவர்!

    ‘100 திருமணம் செய்ய வேண்டும்..இதுதான் என் குறிக்கோள்’ – ஆச்சரியப்படுத்தும் 60 வயது முதியவர்!

    பாகிஸ்தானைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், அவருடைய வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

    திருமணம் குறித்தான பதிவுகள் இணையத்தை சுற்றி வருவது ஏராளம். முதியவர் இளம் பெண்ணை மணப்பது போன்றும், இளைஞர் மூதாட்டியை மணப்பது போன்றும் இணையத்தில் வைரலான காணொளிகள் பல. 

    அந்த வகையில் ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்தக் காணொளியில், 60 வயதுடைய முதியவர் 19 முதல் 20 வயது வரை உள்ள மனைவிகளுடன் பேசுகிறார். தனது வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்ய வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருப்பதாகவும், இதுவரை 26 முறை திருமணம் செய்து இருப்பதாகவும், அதில் 22 பேரை விவாகரத்தும் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

    தற்போது 4 மனைவிகளுடன் வசித்து வரும் இவர், அவர்கள் நால்வருக்கும் குழந்தை பிறந்ததும் விட்டு விலகிடுவேன் என்றும் கூறியுள்ளார். 22 மனைவிகளுக்கும் 22 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் அம்மாக்களுடன் வசித்து வருவதாகவும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்து கொடுப்பதற்கு முன்பாக குழந்தைகளுக்கு சொத்தை பிரித்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படியும் ஒரு மனிதரா என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ‘5 வயசுலலாம் இனி ஒன்னாவது படிக்க முடியாது’ – மத்திய அரசு சொல்வது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....