Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரு ரூபாய் சில்லறை.. மனமுடைந்த பயணி.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

    ஒரு ரூபாய் சில்லறை.. மனமுடைந்த பயணி.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

    பெங்களூரு மாநகர பேருந்தில் நடத்துநர் ஒரு ரூபாய் சில்லறை தராமல் கடிந்துகொண்டதால் மனமுடைந்த பயணி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 3 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக பெற்றுள்ளார். 

    கர்நாடக மாநிலம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழக பேருந்தில் 2019 ஆம் ஆண்டு ரமேஷ் நாயக் என்ற பயணி, பெங்களூரு சாந்தி நாகிரெய்ல் இருந்து மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு பயணம் செய்துள்ளார். அப்போது பயணசீட்டு வாங்க நடத்துநரிடம் 30 ரூபாய் கொடுத்துள்ளார். நடத்துநர் 29 ரூபாய்க்கான பயணசீட்டை கொடுத்து விட்டு மீதி சில்லறை ஒரு ரூபாயை கொடுக்கவில்லை. 

    இதையடுத்து ரமேஷ் நாயக் இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவருக்கான மீதி சில்லறை வழங்கப்படவில்லை. சில்லறை கேட்டதற்காக அதிகாரிகள் பயணியை கடிந்துள்ளனர். 

    இதனால் மனம் தளர்ந்த பயணி ரமேஷ், தனக்கு ஒரு ரூபாய் சில்லறை தராமல் கடிந்து கொண்டதற்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம் ரூபாய் கேட்டு பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

    இது ஒரு அற்பமான விஷயம் எனக்கூறி பெங்களூரு போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், போக்குவரத்து கழகத்திற்கு இது அற்பமான விஷயமாக தோன்றலாம். பாதிக்கப்பட்டவர் பிரச்சனையை உரிமையாக எடுத்துக் கொண்டதால், நுகர்வோரின் உரிமை பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் நிவாரணத் தொகையை திரும்பப் பெற உரிமை உண்டு என தெரிவித்தது. 

    மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்ட ஈடாக 2 ஆயிரம் ரூபாயும், வழக்குத் தொகையாக ஆயிரம் ரூபாயும் என 3 ஆயிரம் ரூபாயையும் பெங்களூரு போக்குவரத்து கழகம் அவருக்கு அளிக்க வேண்டும் என்றும் இந்த நஷ்ட ஈடுத் தொகையை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்காத பட்சத்தில், ஆண்டுக்கு 6 ஆயிரம் வரை வட்டி செலுத்த நேரிடும் என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

    ‘100 திருமணம் செய்ய வேண்டும்..இதுதான் என் குறிக்கோள்’ – ஆச்சரியப்படுத்தும் 60 வயது முதியவர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....