Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைசத்தியத்தின் மூலம் இம்ப்ரஸ் செய்யும் காதலர்கள் - ப்ராமிஸ் டே ஸ்பெஷல்!

    சத்தியத்தின் மூலம் இம்ப்ரஸ் செய்யும் காதலர்கள் – ப்ராமிஸ் டே ஸ்பெஷல்!

    காதல் மாதத்தில் இன்றைய தினம் ‘ப்ராமிஸ் டே’- வாக கொண்டாடப்படுகிறது. ரோஜாக்களை பகிரந்தும், காதலை தெரிவித்தும், டெடிக்களை கொடுத்தும் இந்த வார தினங்கள் நகர்ந்துக்கொண்டிருக்க, இன்று தங்கள் இணையருக்கு பலரும் சத்தியம் செய்தும், சத்தியத்தின் மூலம் இம்ப்ரஸ் செய்தும் வருகின்றனர். 

    எந்த ஒரு உறவிலுமே ஒரு பாதுகாப்புத் தன்மையை உணர்வதுதான் அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. அதுவும் காதலில் இதுதான் முக்கியம். பயமில்லாமல் என்ன ஆனாலும் இவர் நம்முடன் இருப்பார் என்ற எண்ண ஒட்டம் நம்மை ஆசுவாசப்படுத்துவதுப் போல் வேறெதுவும் அவ்வளவு எளிதில் நம்மை ஆசுவாசப்படுத்தாது. 

    ஆனால், அந்த ஆசுவாசம் எளிதில் கிட்டிவிடுமா என்ன? ஒருவேளை உங்களுக்கு அது கிட்டியிருந்தால் நீங்கள் அதிர்ஷடசாலி என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். அந்த அதிர்ஷ்டம் கிடைக்காத தூரதிர்ஷ்டவாளிகள் நிறையவே இந்த பூவுலகில் இருக்கின்றனர். பெரும்பாலும், காதல் உறவில் ஒருவர் எதிர்பார்ப்பது, ‘உன்னை விட்டு போக மாட்டேன்’ என்ற ஒரு நம்பிக்கையைத்தான். அந்த நம்பிக்கையை விதைப்பது சொற்கள் அல்ல. செயல்கள். 

    காதல் வாழ்வுதோறும் அதை செயல்களால், அன்பின் நிமித்தங்களால் காண்பித்து வந்தாலும், இன்று அதை வார்த்தையால் அன்பின் மொழியால் தங்கள் இணைகளிடத்தில் வெளிப்படுத்தி உறுதித்தன்மையை தெரிவிக்கின்றனர். இந்த ப்ராமிஸ் டேவில் இது மட்டும்தானா என்றால்? இல்லை. 

    ஒவ்வொருவருக்கும் ஏற்ப தங்கள் இணைகளுக்கு தரும் உறுதிகள் மாறுபடும். ‘காதல் கனவே உனை கைவிட மாட்டேன்’ என்றும், ‘நீயின்றி நானும் இல்லையே’ என்றும், ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்றும், ‘உன்னைப் பிரிந்தால் உயிர்வாழ அன்றில் பறவை நான்’ என்றும் இன்னும் பலவாறும் காதலர்கள் அவரவர்களுக்கு உரிய மொழியில் இன்றைய ப்ராமிஸ் டேவை கொண்டாடி வருகின்றனர். 

    விஜய்யின் லியோ; அனிருத் வெளியிட்ட ‘பிளடி ஸ்வீட்’ வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....