Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் லியோ; அனிருத் வெளியிட்ட ‘பிளடி ஸ்வீட்’ வீடியோ!

    விஜய்யின் லியோ; அனிருத் வெளியிட்ட ‘பிளடி ஸ்வீட்’ வீடியோ!

    லியோ படத்தின் ‘பிளடி ஸ்வீட்’ பாடலின் கம்போஸிங் வீடியோவை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு புரோமோ வடிவில் சமீபத்தில் வெளியாகி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    இந்தப் புரோமோ அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதுவரையில் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை புரோமோ பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘பிளடி ஸ்வீட்’ என்ற பாடல் தனி கவனத்தை ஈர்த்தது. 

    இதைத்தொடர்ந்து, அப்பாடலை இசையமைப்பாளர் அனிரூத் ஸ்டிரிமிங் ப்ளாட்ஃபார்மில் வெளியிடுவதாக அறிவித்து அதன்படியே அவர் வெளியிட்டார். இவற்றிலும் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், லியோ படத்தின் ‘பிளடி ஸ்வீட்’ பாடலின் கம்போஸிங் வீடியோவை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

     முன்னதாக, ‘பிளடி ஸ்வீட்’ பாடலின் பாடலாசிரியர் ஹெய்சன்பெர்க் என்பவர் யார் என கேட்டு ட்விட்டரில் பதிவுகள் பறந்ததும், தற்போது வரை அதற்கு பதில் கிட்டாததும் குறிப்பிடத்தக்கது. 

    திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம்; விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....