Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சென்னையில் தயாரிக்கப்பட்ட 'கண்' மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

    சென்னையில் தயாரிக்கப்பட்ட ‘கண்’ மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

    அமெரிக்காவில் சென்னையைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. 

    சென்னையில் குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகியது. 

    அந்தக் கண் மருந்தில் உள்ள பாக்டீரியா வகையால் மரணம், கண் பார்வை இழப்பு போன்றவை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதன் காரணமாக இந்த மருந்தை பயன்படுவதை தவிர்க்க அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேட்டுக்கொண்டது. 

    இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    ரத்தம், நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய சூடோமோனாஸ் ஏருகினோசா என்ற பாக்டீரியா வகை பரவி இருப்பது குறித்து ஆய்வு செய்ததாகவும், பாக்டீரியாவின் இந்த வகை அமெரிக்காவில் முன்னதாக அடையாளம் காணப்பட்டதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுவரை, 12 மாநிலங்களில் 55 பேருக்கு இந்த பாக்டீரியா வகை தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  கண் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொற்று ஏற்படுவதற்கு முன் குளோபல் நிறுவனம் தயாரித்த மருந்தை பயன்படுத்தியதாகவும், கண் தொற்று உள்ள மற்றும் இல்லாத நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட எஸ்ரிகேர் கண் சொட்டு மருந்துகளின் திறந்த பாட்டில்களில் பாக்டீரியா வகை இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  தெரிவித்துள்ளது.

    எஸ்ரிகேர் மருந்தை பயன்படுத்தியவர்கள் மற்றும் கண்களில் அசௌகரியத்தை உணர்ந்தவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம்- சென்னை மாநகர காவல் ஆணையர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....