Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம்- சென்னை மாநகர காவல் ஆணையர்

    வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம்- சென்னை மாநகர காவல் ஆணையர்

    பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

    சென்னை, அடையாறு தனியார் கல்லூரி ஒன்றில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கான சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மகளிர் ஆணைய தலைவர் குமாரி மற்றும் வழக்கறிஞர் ஆதி லக்ஷ்மி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாணவர்களிடம் பேசியபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம் என்றும், அதே சமயம் அனைவரும் காவலன் செயலியை மொபைல் போனில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார். மேலும் இதன் மூலம் அவசர தேவைக்கு காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

    பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க காவல்துறை தனி கவனம் செலுத்தி வருவதாகவும், 80 சதவீதம் பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே பாதிக்கப்படுவதாகவும் சங்கர் ஜிவால் தெரிவித்தார். 

    மேலும் பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம் எனவும், பெண்களின் உதவிக்கு காவல்துறை மூலம் 181 என்ற எண்ணை தொடர்புகொண்டு உதவி பெறலாம் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

    ஏகே 62: விக்னேஷ் சிவன் செய்த செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....