Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதீவிர பயிற்சியில் ஆஸ்திரேலியா; அஸ்வினை சமாளிக்க புதிய யுக்தி!

    தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலியா; அஸ்வினை சமாளிக்க புதிய யுக்தி!

    அஸ்வினை போன்று பந்து வீசக்கூடிய 21 வயதான சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் பித்தியா என்பவரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

    நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரையும், இருபது ஓவர் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. 

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், டெஸ்ட் தொடர், வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும், டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாகபுரியில் நடைபெறுகிறது. 

    இதை முன்னிட்டு, பெங்களூரில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஆஸ்திரேலிய அணி. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாத ஆஸ்திரேலியா, இந்த டெஸ்ட்டில் வெற்றிப்பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது. 

    இதனால், தீவிரமனா பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி ஈடுபட்டு வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சுழற்பந்து வீச்சு பிரதான பங்கு வகிக்கக்கூடும் என கருதியுள்ள ஆஸ்திரேலிய அணி அதற்கு தகுந்தவாறு தனது பயிற்சி முறைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்துள்ளது.

    ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் சுழலுக்கு சாதகமானது போன்ற ஆடுகளத்தை தயார் செய்து, அங்கு அஸ்வினை போன்று பந்து வீசக்கூடிய 21 வயதான சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் பித்தியா என்பவரை வலைப்பயிற்சியில் வீச செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள்.

    அதேநேரம், இந்திய வீரர்கள் நாகபுரியில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்து. 

    மதம், கடவுளுக்கு எதிரான கருத்துகளை நீக்கவில்லை; விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....