Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுனோ பூங்காவில் 8 சிறுத்தைகளை கண்காணிக்க 9 பேர் கொண்ட குழு அமைப்பு

    குனோ பூங்காவில் 8 சிறுத்தைகளை கண்காணிக்க 9 பேர் கொண்ட குழு அமைப்பு

    குனோ தேசிய பூங்காவில் இருக்கும் 8 சிறுத்தைகளை கண்காணிக்க 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்துள்ளது.

     பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நமீபியாவிலிருந்து தனி விமானம் மூலமாக 8 சிறுத்தைகள் அழைத்து வரப்பட்டன. 

    அந்த 8 சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய வன விலங்கு உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி தன் பிறந்தநாளன்று திறந்து விட்டார். 

    நமது நாட்டில் முற்காலத்தில் வேட்டையாடி அழிந்து போன சிறுத்தை இனத்தை மீண்டும் உருவாக்க ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவிலிருந்து 5 ஆண் சிறுத்தைகளும் 3 பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க:அமெரிக்காவில் இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்; பிஞ்சு குழந்தையை கூட சுட்டு கொன்ற கொடூரர்கள்

    முன்னதாக, செப்டம்பர் 25 ஆம் தேதி பிரதமர் மோடி, ‘கண்காணிப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுத்தைகளை மக்கள் எப்போது பார்க்க முடியும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வாழும் சிறுத்தைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, 

    குழு உறுப்பினர்கள், சிறுத்தைகளின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் சுகாதார நிலையை கண்காணிப்பதில் கவனம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....