Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; உருவான மிகப்பெரிய அலைகள்

    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; உருவான மிகப்பெரிய அலைகள்

    இந்தோனேசியாவில் 7.6 அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இந்தோனேசியாவில் நேற்று இரவில் பயங்கரமான நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 என்று பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது ஆஸ்திரேலியா வரை உணரப்பட்டுள்ளது. 

    இந்த நிலநடுக்கம் காரணமாக, இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதன்பின்பு, மூன்று மணி நேரத்துக்குப் பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இது குறித்து புவியியவல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; 

    இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலிலிருந்து 105 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும், ஆழமான நிலநடுக்கங்கள், மிக லேசான மேற்பரப்பு சேதங்களை ஏற்படுத்தினாலும், மிகப் பரவலாக உணரப்படுவது இயல்பு.

    ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். பலரும் நீண்ட நேர நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தனர். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மிகப்பெரிய அலைகள் கடலில் எழுந்ததாகவும், அதன் பிறகு அது குறைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    ஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....