Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி!

    ஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி!

    புதுச்சேரியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் ஜி20 மாநாடு வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைமை செயலர் ராஜீவ் வர்மா தலைமை தாங்கினார். புதுவை மாவட்ட ஆட்சியரும், ஜி20 தொடர்பு அதிகாரியுமான வல்லவன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அரசு செயலர்கள் ராஜூ, ஜவஹர், முத்தம்மா, உதயக்குமார், குமார், நெடுஞ்செழியன், ரிஷிதா குப்தா, ஆரோவில் பவுண்டேஷன் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி, புதுவை போலீஸ் டி.ஜி.பி.மனோஜ்குமார் லால் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கம் கூட்டம் முடிந்தவுடன் ஜி20 தொடர்பு அதிகாரியான கலெக்டர் வல்லவன் கூறுகையில்,

    புதுச்சேரியில் வருகிற 30, 31-ந் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளதாகவும், கூட்டத்தில் 20 உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும், 20 உறுப்பினர்கள் அல்லாத நாட்டு பிரநிதிகளும் கலந்துக் கொள்கிறார்கள்.

    மாநாட்டின் முன்னேற்பாடுகள் குறித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுவை மரப்பாலம் பகுதியில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் 30-ந் தேதி புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். இந்த வாய்ப்பினை புதுச்சேரி கலாசாரம், சுற்றுலா, கலை வடிவங்கள் அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பிரநிதிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் அவசர கால மருத்துவ வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வரலாற்று பிரதான சின்னங்கள், தலைவர்கள் சிலைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. இதில் ஜி20 சின்னம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாநாட்டை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி மத்திய வெளியுறவு துறை ஏற்றுக்கொண்டுள்ளது. ஜி20 மாநாட்டில் மேற்கொள்ளப்படும் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்காக ரூ.1 கோடியே 25 லட்சம் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    என கூறினார்.

    வாரிசா? துணிவா? டாஸ் போட்டி முடிவு செய்த திரையரங்கு; வைரலான வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....