Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஏலத்திற்கு வரும் சார்லஸ் - டயானா திருமண கேக்; 41 ஆண்டுகள் ஆனாலும் மவுசு குறையல!

    ஏலத்திற்கு வரும் சார்லஸ் – டயானா திருமண கேக்; 41 ஆண்டுகள் ஆனாலும் மவுசு குறையல!

    1981-ம் ஆண்டு இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ், இளவரசி டயானாவை மணந்ததார். 3000-க்கும் அதிகமானோர் பங்கேற்ற திருமண விழாவில் கேக் வெட்டப்பட்டது. அந்த கேக் விருந்தினர்களுக்கு தரப்பட்டது. 

    இந்நிலையில், அந்த கேக் துண்டை விருந்தினர்களில் ஒருவரான நைஜெல் ரிக்கெட்ஸ் என்பவர் 41 ஆண்டுகளாக கேக் துண்டுகளை பாதுகாப்பாக வைத்து இருந்தார். ஆனால், இவர் கடந்த வருடம் இயற்கை எய்தினார். ஆகவே, தற்போது இவர் பாதுகாப்பாக வைத்திருந்த அந்த கேக் துண்டு ஏலத்திற்கு வந்துள்ளது. 

    இந்த கேக்கை இங்கிலாந்தில் உள்ள டோர் அண்ட் ரீஸ் நிறுவனம் ஏலம் விடுகின்றன. இதன் ஆரம்ப விலை ரூ.27,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்காக 23 கேக்குகள் வெட்டப்பட்டிருந்தாலும், இந்த கேக் துண்டானது ஐந்து அடுக்குகள் மற்றும் ஐந்து அடி உயரமுள்ள கேக்கில் இருந்தது என்று கூறப்படுகிறது. 

    அந்த கேக்கானது, கேக் வாங்கப்பட்ட பெட்டியில் இருந்துள்ளது. அந்த பெட்டியில் சார்லஸ் கையால் எழுதப்பட்ட நன்றிக் குறிப்பும் உள்ளது. அதில், “இவ்வளவு சிறந்த பயனுள்ள ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் இவ்வளவு சிரமத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும் என்று டயானாவும் நானும் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மேலும் எந்த வீட்டில் அந்த கேக் இறுதியாக உள்ளதோ அந்த வீட்டில் நாங்கள் அதை பொக்கிஷமாக வைப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்!” என்று எழதப்பட்டுள்ளது. 

    முன்னதாக, இதேபோல், ராணி எலிசபெத்தின் டீ பேக் ஆனது இபேயில் ரூ.9.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது. டீ பேக் ஆனது பயன்பாட்டிற்குப் வந்த பிறகு, வின்ட்சர் கோட்டையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் வெடித்த சித்ரா வழக்கு! விஜய் டிவி பிரபலத்தை கோர்த்துவிட்ட ஹேம்நாத் – அதிர்ச்சி தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....