Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா34 மாணவ மாணவிகள் தற்கொலை; அரசின் அலட்சியம் தான் காரணமா?

    34 மாணவ மாணவிகள் தற்கொலை; அரசின் அலட்சியம் தான் காரணமா?

    ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில் 34 பேர் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 6.15 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில், கடந்த திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 70.70 சதவீதமும், மாணவர்கள் 64.02 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.

    6 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் அதில் இரண்டு லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதில் விரக்தியடைந்த 34 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆறுதல் கூறி வந்தார்.

    அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் , கட்சி நிர்வாகிகள் லோகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த ஆறுதல் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது .

    கடந்தாண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்படி ஒரு சரிவை ஆந்திர மாநிலம் கண்டதில்லை எனவும் கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்பு முறையை சரியாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என அம்மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளன.

    இந்த நிலையில், ஆந்திர கல்வி அமைச்சர் போட்சா சத்யநாராயணா, கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி படிப்பு பாதித்தது என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடக்காததே இந்த நிலைமைக்கு காரணம் என கூறினார்.

    தேர்வில் தோல்வி அடைந்ததற்காக 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து , தன்னம்பிக்கை அளித்து தற்கொலை எண்ணம் வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....