Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னைக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

    சென்னைக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த மூவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் தமிழக எல்லை பகுதியில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது இளைஞர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்த காவல்துறையினர் அவரது உடமைகளை சோதனை செய்யும்போது 6 கிலோ 300 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரனையின் போது கஞ்சா கடத்திய இளைஞர் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பரசுராமன் (வயது 23) என்பதும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் பேருந்து மற்றும் ஒரு ஆந்திர மாநில அரசு பேருந்து போன்றவற்றில் மொத்தம் 5 பாக்கெட்டுகளில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ எடை கொண்ட கஞ்சா சோதனையின்போது சிக்கியது.

    இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த நீதி ராஜன் (வயது 48), கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த அமோஸ்கான் மோசஸ் (27) ஆகியோரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கஞ்சா கடத்திய பரசுராமனை கைது செய்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, சென்னை பகுதியில் விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....