Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்மரங்களை அதிகரிக்க உதவும் விதைப்பந்து - ஓர் சிறப்புக் கட்டுரை!

    மரங்களை அதிகரிக்க உதவும் விதைப்பந்து – ஓர் சிறப்புக் கட்டுரை!

    செம்மண் மற்றும் சாணம் கலந்த உருண்டையில் விதைகளை வைத்து சாலையோரங்களில் வீசுவது தான் விதைப்பந்து முறையாகும். களி மண்ணையும், மாட்டு சானத்தையும் சம அளவில் எடுத்து, பிசைந்து பின் அதனை உருண்டையாக உருட்டி அதனுள்ளே ஒன்றிரண்டு விதைகளை வைத்து மண்ணாலேயே மூடிவிட வேண்டும். வீசும் இடங்களிலெல்லாம் விதைப்பந்துகள் முளைத்து விடும் என உறுதியாக சொல்ல முடியாது. பருவம், சூழல் மற்றும் விதைக்கும் இடம் போன்றவை சரியாக இருந்தால் மட்டுமே விதைப்பந்துகள் முளைக்கும்.

    விதைப்பந்து தோன்றியது எப்படி?

    ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மசனாபு ஃபுகோகா தான் முதன்முறையாக விதைப்பந்தை அறிமுகம் செய்ததாக சொல்லப்படுகிறது. இவர், நெல் மற்றும் பார்லி போன்றவற்றில் விதைப்பந்துகளை உருவாக்கி, சோதனை செய்து பார்த்துள்ளார். விதைப்பந்துகள் குறித்து தன்னுடைய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிப்படையாக வைத்துத்தான் இன்றைய விதைப்பந்துகள் தயாரிக்கப்படுகிறது.

    தயாரிக்கும் முறை:

    வளமான மண் 5 பங்கு, மாட்டுச் சாணம் 3 பங்கு மற்றும் சிறிதளவு சிறுதானிய விதைகளை நன்றாக கலந்து, தண்ணீர் ஊற்றிப் பிசைந்து சிறிய உருண்டைகளாக மாற்ற வேண்டும். உருண்டையின் நடுவே சிறு பள்ளம் எடுத்து, அதில் மர விதையை வைத்து, மீண்டும் மண்ணை வைத்து மூடி விட வேண்டும். பிறகு, 2 மணி நேரம் வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயாராகி விடும்.

    எப்போது விதைப்பந்துகளை வீசலாம்?

    ஈரப்பதம் உள்ள மண்ணில் விதைகள் நன்றாக முளைத்து விடும். மழை அதிகமுள்ள செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விதைப்பந்துகளை வீசினால் நல்ல பலன் கிட்டும். விதைகளை நேரடியாகவோ அல்லது விதைப்பந்துகளாகவோ வீசலாம்.

    எங்கு வீசலாம்?

    மலைகள் மற்றும் வனப்பகுதிகள் தான் விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்க்க ஏற்ற இடங்கள். ஏற்கெனவே அந்தச் சூழலில் நன்றாக வளர்ந்த மரங்களின் விதைகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலன் தரும். மழை பொழியும் போது, விதைப்பந்துகள் ஈரமாகி அதனுள் இருக்கும் விதை முளைத்து விடும். எங்கெல்லாம் மரக்கன்றுகள் வைத்து தினமும் பராமரிக்க முடியாதோ, அங்கெல்லாம் விதைப் பந்துகளை வீசி மரங்களை வளர்க்கலாம். காட்டுப்பகுதிகளில் விதைப்பந்துகளை வீசுவதன் மூலமாக, வனப்பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை அதிகமாகி அடர்ந்த காடுகளை உருவாக்க முடியும்.

    எந்தெந்த விதைகளை விதைக்கலாம்?

    வேப்ப மரம் வனப்பகுதிகளில் அதிகமாக முளைத்து வளரும்.  இதுதவிர புங்கை, வேங்கை, மகிழம், இலவம், வாகை, கொய்யா மற்றும் புளி போன்ற நாட்டு மர விதைகளை விதைப் பந்துகள் மூலம் தூவலாம். அதேபோல முளைப்புத் திறனை அதிகரிக்க, கடினமான தோல் உடைய விதைகளை, வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதிலும் ஊற வைத்து, விதைப்பந்து தயாரிக்கலாம்.

    தவிர்க்க வேண்டிய இடங்கள்:

    தரிசு மற்றும் கட்டாந்தரை போன்ற இடங்களில் வீசப்படும் விதைப்பந்துகள் வளர்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்கள் புழக்கம் அதிகம் இல்லாத இடங்களில் மட்டும் விதைப்பந்துகளை வீசலாம். விளை நிலங்கள் இருக்குமிடத்தில் இப்பந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....