Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுரங்கம்மை நோய் அறிய பரிசோதனைக் கருவி அறிமுகம்..

    குரங்கம்மை நோய் அறிய பரிசோதனைக் கருவி அறிமுகம்..

    டிரான்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குரங்கம்மை உடனடி பரிசோதனைக் கருவி ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கம்மை உடனடி பரிசோதனைக் கருவி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

    இந்த கருவியை, டிரான்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த பரிசோதனைக் கருவியை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் வெளியிட்டார்.

    இந்த கருவியின் மூலம் குரங்கம்மை தொற்று பாதிப்பை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் வாஜிரானி தெரிவித்தார்.

    உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....