Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅக்டோபர் மாதத்தில் மட்டும் 21 நாள்களுக்கு விடுமுறையா?

    அக்டோபர் மாதத்தில் மட்டும் 21 நாள்களுக்கு விடுமுறையா?

    அக்டோபர் மாதத்தில் மட்டும் 21 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது என செய்திகள் வெளியாகியுள்ளன. 

    அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் வருவதால் வங்கிகளுக்கு 21 நாள்கள் விடுமுறை அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆர்பிஐ காலண்டரை பொறுத்தமட்டில் அக்டோபர் மாதத்தில் 15 நாள்கள் விடுமுறை என்று இடம்பெற்றுள்ளது. மேலும், 6 வார இறுதி நாள்களுக்கான விடுமுறையும் சேர்த்து மொத்தமாக 21 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அனைத்து விடுமுறைகளும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. மாநிலங்களுக்கேற்ப விடுமுறையானது மாறுபடுகிறது. அக்டோபர் 1-ம் தேதி அரையாண்டு கணக்கு முடிப்பு பணிகளுக்காக வங்கிகள் இயங்காது.

    அக்டோபர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை. காந்தி ஜெயந்தி ஆதலால் அன்று அரசு விடுமுறை. மூன்றாம் தேதி சில மாநிலங்களுக்கு துர்கா பூஜை விடுமுறை. நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை. அரசு விடுமுறை நாள்கள்.

    அதுபோலவே அக்டோபர் 7 மற்றும் 8- ம் தேதிகளில் ஒரு சில மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடப்படுமாம். அன்று விடுமுறையாம். அதன்பிறகு அக்டோபர் 8ஆம் தேதி மிலாது நபி அரசு விடுமுறை. அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி என விடுமுறை பட்டியல் நீள்கிறது.

    இதனுடன் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து கொள்ளும்பட்சத்தில், குறைந்தபட்சம் ஒரு மாநிலத்தில் இயங்கும் வங்கிகளுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் 10 நாள்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: உலக பிரசித்தி பெற்ற ‘குலசை தசரா திருவிழா’ கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....