Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை சர்வதேச திரைப்பட விழா; விருதுகளைப் பெற்ற தமிழ்த் திரைப்படம்...

    சென்னை சர்வதேச திரைப்பட விழா; விருதுகளைப் பெற்ற தமிழ்த் திரைப்படம்…

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நேற்றோடு முடிவுப்பெற்றது. இதில் விருதுகள் வழங்கப்பட்டன. 

    சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. 

    இந்த சர்வதேச திரைப்பட விழாவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சத்யம் திரையரங்கு வளாகத்தில் உள்ள திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம் ஒவ்வொரு நாளும் 20 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அந்த வகையில், 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டன. 

    இவ்விழாவில், தமிழ் பிரிவில் ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசடதபற, நட்சத்திரம் நகர்கிறது, கிடா, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12படங்கள் பங்கேற்றன. 

    இந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். 

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவைப் பொறுத்தவரையில், மொத்தமாக இரு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, குறும்படங்களுக்கான பிரிவில் சிறந்ததிரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கான விருதுகள், ‘ஊமை விழி’ படத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், அழகி குறும்படத்துக்காக சிறந்த நடிகர் விருது லோகநாதனுக்கு வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, திரைப்படங்கள் பிரிவில் முதல்பரிசை ‘கிடா’வும், இரண்டாவது பரிசை ‘கசடதபற’ படமும் பெற்றன. சிறந்த நடிகருக்கான விருதானது  நடிகர்கள் விஜய் சேதுபதி , பூ ராமு ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், சிறப்பு நடுவர் விருது ‘இரவின் நிழல்’ படத்துக்கும், சிறப்பு சான்றிதழ் விருது ‘ஆதார்’ படத்துக்கும் வழங்கப்பட்டது.

    பிரபல நடிகர் மரணம்; திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....