Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல நடிகர் மரணம்; திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல்..

    பிரபல நடிகர் மரணம்; திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல்..

    தெலுங்கு மொழி மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா இன்று காலை காலமானார். 

    தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்  கைகாலா சத்தியநாராயணா. இவர் இதுவரையில் 750-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மாயாபஜார் திரைப்படத்தில் ‘கல்யாண சமையல் சாதம்’ என கைகாலா சத்தியநாராயணா பாடியது தென்னிந்திய திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றளவும் அந்த ஒரு காட்சிக்கென பல ரசிகர்கள் உள்ளனர். 

    இந்நிலையில், கைகாலா சத்தியநாராயணா இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில்  சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய சத்தியநாராயணா, நாயனகாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். 

    மேலும், இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார். தற்போது கைகாலா சத்தியநாராயணாவின் மறைவுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய இன்சைட் விண்கலத்தின் கண்கலங்க வைக்கும் கடைசி செய்தி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....