Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதொடங்கிய முதல் நாளே சோகம்.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழைக்கு இதுவரை 2 பேர் பலி

    தொடங்கிய முதல் நாளே சோகம்.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழைக்கு இதுவரை 2 பேர் பலி

    சென்னையில் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர்.

    சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். 

    சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் மழை பெய்து கொண்டிருந்தபோது அவரது வீட்டின் பால்கெனியில் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, பால்கெனி சுவர் ஈரத்தில் ஊறியதால் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய சாந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

    அதேபோல், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான தேவேந்திரன் என்பவர் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரக்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் சென்ற தேவேந்திரன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    சென்னையில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இது போன்ற விபத்துகளும் ஏற்படுகின்றன.

    இதையும் படிங்க:  நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி; 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....