Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்ரூ.420 கோடியில் 1000 புதிய பேருந்துகள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

    ரூ.420 கோடியில் 1000 புதிய பேருந்துகள் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

    தமிழகத்தில் புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    கடந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தான் தமிழகத்தில் புதிதாக 1000 பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் வெளியிட்டுள்ளார்.

    அந்த அரசாணையில்,பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கும் புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு பேருந்து தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
    விழுப்புரம் -180, சேலம் – 100, கோவை -120, கும்பகோணம் – 250, மதுரை – 220
    நெல்லை – 130 என புதிய பேருந்துகள் வாங்க கணக்கீடு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 அடுக்குகளில் பார்க்கிங் வசதி; கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....