Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 அடுக்குகளில் பார்க்கிங் வசதி; கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி

    மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 அடுக்குகளில் பார்க்கிங் வசதி; கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் அதிநவீன 6 அடுக்குகளில் பார்க்கிங் வசதி அறிமுகமாக உள்ளது. 

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருகிற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் அதிநவீன 6 அடுக்குகளில் பார்க்கிங் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. 

    இந்த புதிய 6 அடுக்கு பார்க்கிங்கில் இருசக்கர வாகனங்களை 2 மணி நேரம் நிறுத்த 25 ரூபாயிலிருந்து தற்போது 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 ரூபாய் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கார்களை 30 நிமிடங்கள் வரை நிறுத்த 40 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும், 2 மணி நேரத்திற்கு 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. காரை ஒருநாள் முழுவதும் நிறுத்த 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

    அதேபோல் வேன் மற்றும் டெம்போ வாகனங்களை அரை மணி நேரம் நிறுத்த 40 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், ஒருநாளை முழுவதும் நிறுத்துவதற்கு 1000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம் பேருந்து மற்றும் ட்ரக்குகளை 2 மணி நேரம் வரை நிறுத்த 110 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தக் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; தமிழிசை சௌந்தரராஜன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....