Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; கைப்பற்றிய நியூசிலாந்து..மழையால் ஸ்தம்பித்த ஆட்டம்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; கைப்பற்றிய நியூசிலாந்து..மழையால் ஸ்தம்பித்த ஆட்டம்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

    இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இவற்றுள் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. 

    இதைத்தொடர்ந்து இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது. இதன்பின்பு நடைபெற இருந்த இரண்டாவது ஒருநாள் ஆட்டம் மழைக்காரணமாக கைவிடப்பட்டது. 

    இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் ஆட்டம் தற்போது கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    அதன்படி, இந்திய அணி பேட்டிங்கில் களம்கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான்-சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். தொடரை சமனில் முடிக்க இந்தியா போராடும் என்று எதிர்பார்க்கையில், கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஷிகர் தவான் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயருடன் பந்த் இணைந்தார். ஆனால், பந்த் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின்பு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

    இதன்பின்பு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, வாஷிங்டன் சுந்தர் மட்டும் அரைசதம் விளாசினார். அவர் 64 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 

    மொத்தத்தில், நியூசிலாந்து அணியின் கிடுக்குப்பிடி பந்துவீச்சால் இந்திய அணி 47.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 

    அந்த அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் கான்வே களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சீராக விளையாடிய ஃபின் ஆலன் 54 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 

    நியூசிலாந்து அணி 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டமானது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டக்களத்தில், கான்வே 38 ரன்களுடனும், வில்லியம்சன் பூஜ்ய ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மேலும், 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 

    புரோ கபடி போட்டி: வெற்றி வாகை சூடிய குஜராத், ஹரியானா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....