Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரயிலில் பட்டாக்கத்தியுடன் செல்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை - ரயில்வே போலீஸ்...

    மக்களை அச்சுறுத்தும் வகையில் ரயிலில் பட்டாக்கத்தியுடன் செல்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை – ரயில்வே போலீஸ் அதிரடி

    ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் ஓடும் ரயிலில் பயணித்தவாறே நடைபாதையில் பட்டாகத்தியை தீட்டிய மாணவர்களின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது .

    அந்தக் காணொளியில், ரயில் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் ஒரு மாணவர், அவர் வைத்திருக்கும் ஒரு பட்டா கத்தியால் பெரம்பூர் ரயில் நிலைய நடைபாதையில் தேய்த்தபடி செல்கிறார்.

    சென்னை-திருத்தணி மின்சார ரயிலில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 6 பேர் முன்பே ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

    இதனிடையே பட்டாக்கத்தியுடன் சென்ற ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மாணவனை நேற்று காவல்துறை கைது செய்தது. மேலும், கத்தி வைத்திருந்து காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிய மாணவன், இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். 

    இந்நிலையில், ‘பட்டாகத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால், இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153 என்ற விதியின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். விஷம செயல்களில் ஈடுபடக் கூடாது’ என ரயில்வே காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் பள்ளி வாகனத்தின் ‘அவசர வழி கதவு’ உடைந்து சிறுமி படுகாயம்.. பொதுமக்கள் ஆவேசம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....