Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா3-வது நாளாக மூணாறில் ஜீரோ டிகிரி வெப்பநிலை

    3-வது நாளாக மூணாறில் ஜீரோ டிகிரி வெப்பநிலை

    மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் நிலவி வருகிறது.       

    கேரள மாநிலம், மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாறில் படிப்படியாக வெப்பநிலை குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஏழுமலை, தேவிகுளம் எஸ்டேட் பகுதிகளில் ஜீரோ டிகிரி வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    தேயிலை தோட்டங்களும், பச்சை புல்வெளிகளும் வெள்ளை கம்பளி போர்த்தப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன. 

    மேலும் மூணாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் 20 முதல் 25 டிகிரி வெப்பநிலையை காணப்படுகிறது. அதிகாலை பொதுழுதுகளில் ஜீரோ டிகிரி வெப்பநிலை பதிவாகிறது. 

    கடும் குளிர் காரணமாகவும் அழகான சூழல் நிலவுவதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    விண்ணில் தெரியப் போகும் வால் நட்சத்திரம்; 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அற்புதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....