Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா

    உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா

    உலகக்கோப்பை ஹாக்கித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்தியாவில், சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவர்  ஹாக்கி உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று ஹாக்கி உலகக் கோப்பையின் முதல் போட்டி நடைபெற்றது. 

    இதில் இந்தியா ஸ்பெயின் மோதும் ஆட்டம், உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமான ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் 12-ஆவது நிமிடத்திலும், 26-ஆவது நிமிடத்திலும் இந்திய அணி கோல் அடித்து முன்னிலைப் பெற்றது. அதேசமயம் ஸ்பெயின் அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் இந்திய அணியினர் முறியடித்தனர்.

    ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றும் வித்தை; சென்னையை சேர்ந்தவர் கைது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....