Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஷட்டர் மீது பாயந்த மின்சாரம்... காவலாளி பரிதாப பலி ! நிறைவடையாத கால்வாயால் நடந்த...

    ஷட்டர் மீது பாயந்த மின்சாரம்… காவலாளி பரிதாப பலி ! நிறைவடையாத கால்வாயால் நடந்த சோகம்

    சென்னை அருகே குரோம்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து பிகார் இளைஞர் உயிரிழந்தார்.

    பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 28 வயதான ரா.கிருஷ்ணா மோகன் குமார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒரு கைப்பேசி சேவை நிறுவன அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மேலும், அவர் தன் குடும்பத்துடன் தங்கி வந்திருக்கிறார். 

    இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை மோகன்குமார் அலுவலகத்தின் ஷட்டர் கதவை திறக்க சுவிட்ச் போட முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த மோகன்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மோகன்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அவர் வேலை செய்யும்  சேவை நிறுவன அலுவலகத்திற்கு எதிராக மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில் மின்சாரம் வயர்களும் செல்வதால், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். 

    மேலும், இச்சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க2 குழந்தைகளுக்கு மறுவாழ்வு தந்த 18 மாத இளம் பிஞ்சு-மனதை கரைய வைத்த சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....