Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா"நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்": அம்மா சோனியா குறித்து மகள் பகிர்ந்த உணர்ச்சிபூர்வமான பதிவு

    “நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்”: அம்மா சோனியா குறித்து மகள் பகிர்ந்த உணர்ச்சிபூர்வமான பதிவு

    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ள சோனியா காந்தி குறித்து, அவரது மகள் பிரியங்கா காந்தி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள் என தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இதனையடுத்து கணவர் ராஜீவ்காந்தியின் வழியில் கட்சி பொறுப்பை கையில் எடுத்து அரசியலில் குதித்தார். பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்று 2017-ஆம் ஆண்டு வரை மிகச்சிறப்பாக பணியாற்றி கட்சிக்கான தன் பங்களிப்பை முழுமையாக வழங்கியிருந்தார்.

    இதற்கு பிறகு தன் தலைவர் பதவிக்கு அனைத்து பொறுப்புகளையும், மகன் ராகுல் காந்தியிடம் வழங்கிவிட்டு, சற்று ஓய்வில் இருந்தார். கட்சியின் அனைத்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, தன் கட்சி பணியை மிகச்சிறப்பாக செய்தும், ராகுல் காந்திக்கு நேரம் சரியில்லையா என்னவோ, அவரது தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.இதனால் அந்த தோல்விக்கு தான் மட்டுமே காரணம் என்று, தார்மீகப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகவே, பின்னர் மீண்டும் சோனியாவே கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை பெரும்பாலும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வகித்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் வெற்றிப்பெற்ற மல்லிகார்ஜூன கார்கே கட்சியின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் தான் வகித்து வந்த தலைவர் பதவிக்கான அனைத்து பொறுப்புகளை சோனியா காந்தி ஒப்படைத்தார்.

    இதையும் படிங்க: மக்களே உஷார்! கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்? இனி நீர் மற்றும் உணவில் கவனம் தேவை

    24-ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சார்ந்திராத மல்லிகார்ஜுன கார்க்கே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிறகு, அவர் சோனியா காந்தி அவர்களுக்கு தன் சார்பில் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார்.அதில் பிரேம் செய்யப்பட்ட ராஜிவ் காந்தி அவர்களின் புகைப்படம் இருந்ததை பார்த்து மகிழ்ந்து போன சோனியா அவர்கள், அந்த புகைப்படத்தை கட்சி தொண்டர்கள் முன்னிலையில் பிரித்து புன்சிரிப்போடு உயர்த்தி தூக்கிப்பிடித்து காட்ட, அங்கிருந்த அனைவரும் ஆராவாரம் செய்தனராம்.

    இதனையடுத்து இந்நிகழ்வு குறித்து தனது இணையதள பக்கமான ட்விட்டரில் , சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, தனது அம்மா குறித்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அம்மா. உலகம் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி, எனக்குத் தெரியும், நீங்கள் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தீர்கள் என்று’ குறிப்பிட்டுள்ளார்.

    பிரியங்கா காந்தியின் இந்த உருக்கமான பதிவை தொடர்ந்து ,ராகுல் காந்தியும் தன் தாய் மற்றும் தந்தையான சோனியா,ராஜீவ் காந்தி ஆகிய இருவருடைய படத்தையும் வெளியிட்டுள்ளார்.அதில் நீங்கள் தனக்கு இல்லாத மகள் என்று அன்றே பாட்டி என்னிடம் சொன்னார்கள்.அது எவ்வளவு சரியான விஷயம் என்று வியந்து ,உங்கள் மகனாக இருப்பதில் நான் பெருமை படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    பிரியங்கா காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் அவர்களும் ,சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றதையொட்டியும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில் இந்த நாட்டின் மீது சோனியா அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பில் இருந்து அவர் தனது அரசியல் உத்வேகத்தைப் பெறுகிறார். மக்களும் அதே அன்பையும், நம்பிக்கையையும் அவருக்கு திரும்ப அளித்தனர்” என உணர்ச்சி பூர்வமாக கூறியிப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: முதல்வருக்கே இந்த கதியா? பிரதமர் மோடியின் பயணத்தின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....