Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமதங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து; பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

    மதங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து; பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

    மதங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்ததாக யோகா குரு பாபா ராம்தேவ் மீது ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ராஜஸ்தான் மாநிலம், பர்மார் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் உரையாற்றினார். அப்போது அவர், இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதோடு இந்து மதப் பெண்களை கடத்துவதாகவும், மற்ற மதங்கள் மத மாற்றத்தை மட்டுமே போதிப்பதாகவும் பேசி இருந்தார். இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், யோகா குரு ராம்தேவ் கருத்துக்கு எதிராக ராஜஸ்தான் மாநிலத்தின் சௌஹாடன் நகரைச் சேர்ந்த பாதாய் கான் என்பவர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

    அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில், மற்ற மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக ராம்தேவ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153ஏ-ன் படி மதம், பிறப்பிடம், வாழ்விடம் குறித்து அவதூறு பரப்புதல், 295 ஏ-ன் படி மத உணர்வுகளை அவமதிப்பதின் மூலம் தீங்கிழைக்கும் செயல் மற்றும் 298-ன் படி மத உணர்வுகளை புண்படுத்தும் கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    வெளியானது, பிக்பாஸ் புகழ் கவினின் ‘டாடா’ படத்தின் டிரைலர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....