Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை; நிவாரணம் அறிவித்த முதல்வர்

    டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை; நிவாரணம் அறிவித்த முதல்வர்

    டெல்டா மாவட்டங்களில் இம்மாத தொடக்கத்தில் பெய்த மழையால், பயிர்கள் சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு நிவாரணங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.

    டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தொடர் மழை பெய்தது. இந்த தொடர் மழைக் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் வேரோடு விளைநிலங்களில் சாய்ந்தன. 

    குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, திட்டை, மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரிரு நாள்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் சேதமடைந்து விளை நிலத்தில் சாய்ந்தன. 

    இச்சம்பவத்தால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

    இதைத்தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழு பயிர் சேதம் குறித்த அறிக்கையை  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளித்தனர்.

    இதன்பின்பு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, பயிர்சேதங்களுக்கான நிவாரணங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, 33% மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும் நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    மதங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து; பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....