Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடபிள்யுபிஎல் - விஸ்வரூபம் எடுத்த கௌர்; சுருண்ட குஜராத் அணி..

    டபிள்யுபிஎல் – விஸ்வரூபம் எடுத்த கௌர்; சுருண்ட குஜராத் அணி..

    டபிள்யுபிஎல் போட்டியில் குஜராத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

    டபிள்யுபிஎல் எனும் மகளிர் ஐபிஎல் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 

    இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஸ்திகா பாட்டியா 1 ரன்னுடன் வெளியேறினர். இருப்பினும், மும்பை அணியின் ஹேய்லி மேத்யூஸ் 47 ரன்களுடனும், நடாலி ஷிவர் 23 ஆகியோர் நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

    மேலும், அந்த அணியின் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர் 30 பந்துகளில் 65 ரன்களை விளாசினார். மொத்தத்தில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207/5 ரன்களை குவித்தது. 

    இதன்பிறகு, 208 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. ஆனால், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. சாப்ஹினி மேக்னா 2, ஹர்லின் தியோல் 0 ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாக்கி பெவிலியன் திரும்பினார்.

    எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பெத் மூனி காயமடைந்து வெளியேற, ஆல் ரவுண்டர் ஆஷ்லி கார்டனரும் வொங் பந்தில் டக் அவுட்டானார். அன்னபெல் சதர்லேண்டை 6 ரன்களுடன் வெளியேற்றினார் சைக்கா இஷாக். ஜார்ஜியா வேர்ஹாமும் 8, ஸ்னே ராணா 1, மான்சி ஜோஷி 6, மோனிகா 10 ரன்களுடனும், தனுஜா கன்வர் 0 என வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர். இறுதியாக தயாளன் ஹேமலதா 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

    மொத்தத்தில் குஜராத் அணி 15.1 ஓவர்களில் வெறும் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் 143 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிப்பெற்றது. 

    வாத்தி பாக்ஸ் ஆபிஸில் பாஸ் ஆனாரா? – வெளிவந்த தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....