Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாத்தி பாக்ஸ் ஆபிஸில் பாஸ் ஆனாரா? - வெளிவந்த தகவல்

    வாத்தி பாக்ஸ் ஆபிஸில் பாஸ் ஆனாரா? – வெளிவந்த தகவல்

    நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளிவந்த படம்தான், வாத்தி. இத்திரைப்படத்தில், சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி வெளிவந்த இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாத்தி படத்தின் வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    அதன்படி, வாத்தி திரைப்படம் தற்போது 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி எனும் வசூலை எட்டியிருந்தது. 

    நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கையிலேயே உயிரிழந்த ஆசிரியர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....