Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்2-ம் உலகப் போரின் வெடிகுண்டு 70 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுப்பு

    2-ம் உலகப் போரின் வெடிகுண்டு 70 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுப்பு

    இரண்டாம் உலகப்போர் 1939-45 காலகட்டத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து பெரும் அரசுகள் உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன.

    உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ, 10 கோடி வீரர்கள் இதில் பங்கு கொண்டனர்.
    இப்போரில் பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

    இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், கடந்த 2009-ம் ஆண்டு 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று, ஜெர்மனியின் டாஸ்ல்டோர்ப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அதேபோல், கடந்த 2011-ம் ஆண்டும் ஜெர்மனியின் கோப்லென்ஸ் பகுதியில், ஒரு வெடிக்கப்படாத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதை, பாதிப்பில்லாமல் வெடிக்க செய்ய, கிட்டத்தட்ட 45,000 பேர் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த குண்டுகள், ஜெர்மனியில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    இதேபோன்று, 2018-ல் லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரைப் பகுதியில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இத்தாலியில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள ‘போ’ ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டுள்ளது.

    இதனால் போர்கோ, வெர்ஜிலியோ பகுதியில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு ஆற்றில் இருப்பதை, கடந்த மாதம் 25-ம் தேதி மீனவர் ஒருவர் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து,  அந்நாட்டின் இராணுவத்தினர் அவ்விடத்திற்கு சென்றனர். பின்னர், அந்த வெடிகுண்டை மெட்டோல் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு இருக்கும் மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வெடிக்க செய்தனர்.

    பின்னர் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘போர்கோ பிராந்தியத்தில் வசிக்கும் சுமார் 3,000 பேர் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்து இருந்தது. மேலும், அப்பகுதியின் வான்வெளி மூடப்பட்டது, அருகிலுள்ள மாநில சாலை, ரயில் மற்றும் ஆற்று பகுதியின் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் உலகப் போர் முடிந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதன் தாக்கம் ஏதோ ஒரு வழியில் இன்றும் உணரப்படுவது, போர்களினால் உண்டாகும் அழிவு முடிவற்றது என்னும் கருத்தை வலுவாக்குகிறது.

    செங்கடலுக்கு அடியில் உயிர் பலியாகும் அதிசய பகுதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....