Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதாயா? சேயா? இக்கட்டான அறுவை சிகிச்சை - சாதித்துகாட்டிய மருத்துவர்கள்!

    தாயா? சேயா? இக்கட்டான அறுவை சிகிச்சை – சாதித்துகாட்டிய மருத்துவர்கள்!

    லக்னோவில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் இருவேறு சவாலான அறுவை சிகிச்சைகளை ஒரேநேரத்தில் மேற்கொண்டு தாய்-சேய் என இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது கர்பிணிப்பெண் ஒருவர் மகப்பேறு மருத்துவரை அணுகியுள்ளார். அதே சமயம், அந்தப் பெண்ணுக்கு தீவிர இதய பிரச்சனையும் இருந்ததன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். மிகவும் சவாலான இரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தததால் பல மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டனர். 

    இருப்பினும் வயிற்றில் சிசுவும் இதய பிரச்சனையும் இருந்ததன் காரணமாக உத்தரகண்டிலுள்ள பல்வேறு மருத்துவர்கள் அந்தப் பெண்ணை மேல் சிகிச்சைக்காக கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்களின் தீவிர ஆலோசனைக்கு பிறகு ஒரே நேரத்தில் சி-செக்ஷன் மற்றும் இதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் இறுதியில் தாய்-சேய் என இருவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. 

    மேலும், இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் சுதிர் சிங்  இது குறித்து கூறுகையில் உயிர்களை காப்பாற்றுவது சவாலானதாக இருந்ததாகவும், உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சவாலான அறுவைசிகிச்சை கர்ப்பிணிக்கு மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல்முறை எனவும் தெரிவித்துள்ளார்.

    நண்பர்கள் என நம்பிய பெண்; வன்கொடுமை செய்த இளைஞர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....