Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மாபெரும் சாதனை புரிந்த பதான்... வசூல் ஆயிரம் கோடியா?

    மாபெரும் சாதனை புரிந்த பதான்… வசூல் ஆயிரம் கோடியா?

    பதான் உலகளவில் இதுவரை ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜீரோ என்ற திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கான் நடிப்பில் திரைப்படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

    இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் என்ற திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகியது. இத்திரைப்படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படமானது யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50-ஆவது படமாகும். 

    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பதான் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. 

    தற்போதைய தகவலின்படி, பதான் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.1000 கோடி வசூல் என்ற பெருமையை பெற்ற இரண்டாவது இந்தி படமாக பதான் உள்ளது. 

    முன்னதாக, அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் ரூ.1000 கோடி எனும் மாபெரும் வசூலை புரிந்திருந்தது. அதோடு, இந்திய அளவில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர், பாகுபலி -2, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே.ஜி.எஃப்-2 போன்ற படங்கள் ரூ.1000 கோடி எனும் வசூலை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ஏகே-62 படத்தின் பூஜை முடிந்ததா? – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....