Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - தேர்தல் அதிகாரிக்கு பறந்த மனு!

    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் – தேர்தல் அதிகாரிக்கு பறந்த மனு!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக, தலைமை தேர்தல் அதிகாரியான சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளது. 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைதேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதே சமயம், தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

    இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 61 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பல புகார்கள் வந்தாலும், இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி எந்தப் புகாரும் வரவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்திருந்தார். 

    மேலும் தேர்தல் நடக்கும் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொளிகள் பகிரப்பட்டாலும், அவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், பணப்பட்டுவாடா குறித்து சமூக வலைதளங்களில் எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.  

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக, தலைமை தேர்தல் அதிகாரியான சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளது. 

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதி மீறல்கள் நடைபெறுவதாக கூறி தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் சத்ய பிரத சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    உலக தாய்மொழி தினம்: வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....