Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉத்தரகாண்டில் மேக வெடிப்பில் சிக்கி பெண் உயிரிழப்பு.. பல வீடுகள் சேதம்

    உத்தரகாண்டில் மேக வெடிப்பில் சிக்கி பெண் உயிரிழப்பு.. பல வீடுகள் சேதம்

    உத்தரகாண்டில் நள்ளிரவில் ஆற்றில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.

    இந்தியா-நேபாள நாடுகளுக்கு இடையே லஸ்கோ ஆறு இருக்கிறது. இந்நிலையில், நேற்றிரவு ஆற்றில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 30 வீடுகள் அழிந்தது. மேலும் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளதாவது:

    தர்ச்சுலா பகுதியில் காளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தர்ச்சுலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    இதைத்தொடர்ந்து, இன்று காலை ஆற்றில் ஏற்பட்ட வலிமையான நீரோட்டத்தின் காரணமாக பெரிய கட்டிடம் ஒன்று இடிந்து, நீரில் மூழ்கி விட்டது. இதை அடுத்து, தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு, அவர் தெரிவி்துள்ளார்.

    காளி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் இந்தியா-நேபாள நாடுகளில் உள்ள பல்வேறு கிராமங்கள் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....