Sunday, March 17, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்யார் இந்த நுபுர் சர்மா?

  யார் இந்த நுபுர் சர்மா?

  தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

  யார் இந்த நுபுர் சர்மா?

  இந்நிலையில், இந்த நுபுர் சர்மா யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் மற்றும் டெல்லி பல்கலைக்கழக சட்டப்பிரிவில் LLB பட்டம் பெற்றுள்ள 37 வயதான நுபுர் சர்மா, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

  அரசியல் வாழ்க்கையின் முதல் அடி:

  ஒரு மாணவர் தலைவராக அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், 2008 ஆண்டில், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பதவியை வென்றார். காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் அப்போது டெல்லி பல்கலைக்கழக வளாகங்களில் வலுவாக இருந்த காலம் அது. ஆனாலும் நுபுர் தலைவர் பதவியை பெற முடிந்தது.

  அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டி:

  2015-ம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலின் போது நுபுர் சர்மா, தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்டது தான் அவரது குறிப்பிடத்தக்க தேர்தல். ஆனாலும் அவர் 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முக்கிய முகமாக இருந்த சர்மா, இளைஞர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் டெல்லி மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.

  பாஜகவின் செய்தித் தொடர்பாளார்:

  2017 ஆம் ஆண்டில் அப்போதைய மாநில பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரி தனது அணியை உருவாக்கிய போது அவர் டெல்லி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2020-ல், ஜேபி நட்டா தனது குழுவை அமைத்தபோது, நுபுர் சர்மா பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய முக்கிய பிரபலங்களோடு, மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரிராஜ் சிங், பூபேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவில் சேர்ந்துள்ளவருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் நுபுர் சர்மாவை பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  நுபுர் சர்மா சர்ச்சை பேச்சு நடந்தது என்ன?

  கடந்த 27-ம் தேதி முன்பு ஞானவாபி மதவழிபாடு தலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து இழிவான வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டாலையும் அக்கட்சி நீக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  2 பேர் உயிரிழப்பு:

  உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. ராஞ்சியில் நடந்த வன்முறையில் பலர் படுகாயமடைந்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

  முஸ்லிம் மத குரு கபூர் கைது:

  இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் கைது செய்யப்பட்டார்.

  நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்த டெய்லர் கொலை:

  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

  நுபுர் சர்மாவிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்:

  முகமது நபி குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் நுபுர் சர்மா மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை தில்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள் நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கரையாக்கிவிட்டார். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்கள் மீது தில்லி காவல்துறையினர் என்ன செய்கிறது. அவர் நடந்து கொண்ட விதம், அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்ககேடானது.

  உதய்பூரில் டெய்லர் படுகொலை செய்யப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால் தான். நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.மேலும் ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசி விடமுடியாது. நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு என தெரிவித்தனர்.

  நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம் தாழ்த்திய செயல், நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.

  நுபுர் சர்மா மனு நிராகரிப்பு

  நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் இதுவரை கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா?

  அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? இதுஜனநாயக நாடுதான், இங்கே பேச்சுரிமையும் இருக்கு, புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு, அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது.

  தாம் பேச்சால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்றக் கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் இனி அவர் நாடு முழுவதும் உள்ள வழக்குகள் அனைத்தையும் நேரில் சென்று எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜி.எஸ்.டி என்றால் என்ன?- பாகம் 1

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....