Sunday, March 17, 2024
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை மறுப்பு; இறந்த 2 வயது சகோதரனின் உடலுடன் தவித்த சிறுவன்

  ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை மறுப்பு; இறந்த 2 வயது சகோதரனின் உடலுடன் தவித்த சிறுவன்

  மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத சூழலில் இறந்து போன 2 வயது சகோதரனின் உடலுடன், 8 வயது சிறுவன் சாலை ஓரமாக இரண்டு மணி நேரம் தெருவில் அமர்ந்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.

  மருத்துவமனைகளில், பணமில்லாத ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இறந்துபோன உறவினர்களின் உடலைத் தோலின் மீதோ, சைக்கிள், இருசக்கர வாகனத்தில் வைத்தோ கொண்டு செல்லும் நிலை மத்திய பிரதேச மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.

  இந்த வகையில், ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை மறுத்ததால் இறந்து போன 2 வயது சகோதரனின் உடலை வைத்துக்கொண்டு சாலை ஓரமாக உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் காணொளி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரில் வசித்து வருபவர் பூஜாராம் ஜாதவ். இவருக்கு 8 வயதில் குல்ஷன் என்னும் மகனும், 2 வயதில் ராஜா என்னும் மகனும் உள்ளனர்.

  இந்நிலையில் பூஜாராம் ஜாதவின் இரண்டாவது மகன் ராஜாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. முதலில் வீட்டிலேயே வைத்து ராஜாவை சரிசெய்ய பூஜாராம் முயன்றார்.

  ஆனால், சிறுவனுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கிச் சென்றுள்ளார். தனது தந்தையுடன் 8 வயது குல்ஷனும் சென்றுள்ளார்.

  மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி ராஜா இறந்துவிட்டார். பணம் ஏதும் இல்லாத பூஜாராம் ஜாதவ், மருத்துவமனை அதிகாரிகளிடம் சிறுவனின் உடலை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

  எனினும் அவரது கோரிக்கையினை மருத்துவ ஊழியர்கள் யாரும் ஏற்கவில்லை. பணமில்லாததால் ஆம்புலன்ஸ் அனுப்ப மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துவிட்டதாக பூஜாராம் கூறியுள்ளார்.

  இதனால் ஊருக்குச் செல்ல ஏதேனும் வாகனத்தை ஏற்பாடு செய்ய பூஜாராம் சென்றுள்ளார். எனவே இறந்துபோன தனது சகோதரனின் உடலை மடிமீது வைத்துக்கொண்டு 8 வயது நிரம்பிய குல்ஷன் சாலையோரமாக அமர்ந்து தனது தந்தைக்காக காத்திருந்துள்ளார்.

  இறந்துபோன தனது சகோதரனை மடி மீதி வைத்துக்கொண்டு குல்ஷன் அமர்ந்திருந்ததை பார்த்த பொதுமக்கள், தங்களது கைப்பேசிகளில் காணொளிகளாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

  இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்டு வந்த காவல்துறையினர், இறந்துபோன சிறுவனின் உடலையும், குல்ஷனையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இறந்த சிறுவன் ராஜாவின் தந்தை பூஜாராம், ஒரு சிறிய பஞ்சர் கடையை நடத்தி வருபவர். பணம் ஏதும் இல்லாத பூஜாராமிடம், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் 2,000 ருபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து பூஜாராம் தெரிவித்துள்ளதாவது:

  ‘எனது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், எனது மகனுக்கு என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை; இரவு முழுவதும் கத்திக்கொண்டே இருந்தான்.  அருகில் உள்ள மருத்துவர்களின் அறிவுரைப்படி மாவட்ட மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். ஆனால் சிகிச்சை பலனின்றி எனது மகன் இறந்து விட்டான்.’

  ‘அவனது உடலை எங்கள் ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் அதிக தொகையினைக் கேட்டனர்.’ என்று கண்ணீருக்கு இடையே பூஜாராம் கூறியுள்ளார்.

  சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியாலும், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் காவல்துறையினரின் இடையூறுகளாலும், மருத்துவமனை நிர்வாகம், கட்டணம் ஏதும் வசூலிக்காமல் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தது.

  யார் இந்த நுபுர் சர்மா?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....