Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉயரப்போகும் தங்கத்தின் விலை... குறையும் கைப்பேசியின் விலை; என்ன சொல்கிறது பட்ஜெட்?

    உயரப்போகும் தங்கத்தின் விலை… குறையும் கைப்பேசியின் விலை; என்ன சொல்கிறது பட்ஜெட்?

    நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 

    இந்த பட்ஜெட் தாக்கலில், புகையிலை பொருள்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விலை உயர்வை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேநேரம், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக அதன் உதிரிபாக இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கைப்பேசியின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும், தங்கம், வைரம், வெள்ளி மற்றும் பித்தளை போன்றவற்றுக்கான இறக்குமதி வரி உயர்கிறது. இதனால், தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    இத்துடன், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட கார், இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள். இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் போன்றவற்றின் விலையும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் லித்தியம் அயன் பேட்டரிகள், தொலைக்காட்சிகளின் விலை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

    11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....